மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சரகம் எழுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, வசிமலையன் கோயில் ஒடை அருகே போலீசார் ரோந்து பணியை மேற்கொள்ளும் பொழுது சட்டத்துக்கு புறம்பாக மாட்டு வண்டியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த 8 நபர்களை கைது செய்து, u/s 379 IPC r/w 21(V) Mines & Minerals Development Act கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்களிடமிருந்து 8 மாட்டு வண்டிகள்மற்றும் 160 மணல் அள்ளும் தட்டுக்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதே போன்று சமயநல்லூர் சரகம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, தரப்பட்டி மயானம் வைகை ஆற்றங்கரைக்கு அருகில், போலீஸ் ரோந்து பணியில் மேற்கொள்ளும் பொழுது சட்டத்துக்கு புறம்பான மணல் அள்ளி கொண்டிருந்த நான்கு நபர்களை கைது செய்து, u/s 379,430 IPC r/w 21(V) Mines & Minerals Development Act கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து Pulzar (1) Hero Splendor (1) Bajaj M80 (2) இருசக்கர வாகனங்கள் 4 பறிமுதல் செய்தனர்.