பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருதை ஆற்றில் மணல் திருட்டு நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி மருவத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் தனது காவல்நிலைய காவலர்களுடன் புறப்பட்டு மேற்படி சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டதில் அங்கு அரசு அனுமதியின்றி மணல் திருடிய 3 நபர்கள் மற்றும் மணல் திருட பயன்படுத்திய JCB, டிராக்டர் மற்றும் லாரிகளையும் ரூபாய் 20000 மதிப்புள்ள மணலையும் கைப்பற்றிய உதவி ஆய்வாளர் திருமதி. விஜயலட்சுமி அவர்கள் மேற்படி நபர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.