சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், அடையாறு சைபர் கிரைம் காவல் குழுவினர், சென்னையை சேர்ந்த நபரிடம் வங்கிக்கடன் பெற்றுத் தருவதாக ஆன்லைனில் பணமோசடி செய்த புகாரின் அடிப்படையில் நடத்திய விசாரணையில், நாமக்கலில் போலியாக கால் சென்டர் நடத்தி வந்த ஐந்து நபர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் இதுபோன்று பல நபர்களிடம் மோசடி செய்ததும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சிறப்பாக பணிபுரிந்த காவல் குழுவினரை 18.09.2020 அன்று, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் அப்துல் ஹாபிஸ்
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் அப்துல் ஹாபிஸ்