தேனி: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹாப்ரியா அவர்களின் உத்தரவின் பேரில், தேனி மாவட்ட காவல்துறையினர் இரவு நேரங்களில் தீவிர நடை ரோந்து (Foot Patrolling) பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடை ரோந்து பணியின் மூலம் திருட்டு, வழிப்பறி, சமூக விரோத செயல்கள் உள்ளிட்ட குற்றங்களை முன்கூட்டியே தடுத்து, சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




















