திருநெல்வேலி : நாங்குநேரி காவல் நிலைய குற்ற எண்: 347/20 பிரிவு 294(b),307,506(ii) இ.த.ச வழக்கில் எதிரியான நாங்குநேரி அண்ணாசாலை பகுதியைச் சேர்ந்த பிச்சைக்கண்ணு என்பவரின் மகன் கொம்பையா (40) என்பவர் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நாங்குநேரி காவல் நிலைய ஆய்வாளர்(பொறுப்பு) திரு. அசோகன் அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், எதிரி கொம்பையாவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை 28.08.2020 ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் சமர்பித்தார்.
திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜோசப் அருண் குமார்