திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியை அடுத்த மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகே திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்து இந்த விபத்தில் பைக்கில் வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா(22). தில்சூல்(21). ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அம்பாத்துரை காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபாண்டி, சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் 2 பேரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




















