பெரம்பலூர் : பெரம்பலூர் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட கொலை வழக்கில் ஈடுபட்ட பிரகாஷ் (30) த/பெ பத்மநாபன், டாக்டர். ராதாகிருஷ்ணன் தெரு, சங்குப்பேட்டை , பெரம்பலூர், மற்றும் விஜயராஜ் (30), த/பெ செல்வக்குமார், திருவள்ளுவர் தெரு, சங்குப்பேட்டை, பெரம்பலூர். ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் திருமதி.சாந்தா இ.ஆ.ப அவர்கள் குற்றவாளிகள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.