புதுக்கோட்டை: காவல் பணியின் போது நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தன் இன்னுயிரை நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் காவல்துறையில் வீரமரணமடைந்த காவலர்களின்
தியாகத்தை நினைவு கூறும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம், ஆயுதப்படை மைதானத்தில் 21.10.2021 ஆம் தேதி இன்று புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்கள் தலைமையில்
நீத்தார் நினைவு தூண் சின்னத்தில் “காவலர் வீர வணக்க நாள் “உறுதிமொழி ஏற்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது .