திருநெல்வேலி : மானூர் காவல் நிலைய குற்ற எண் 367/20 பிரிவு 8(சி) உடன் இணைந்த 20(b)(ii)(B),25,29(1) போதை மருந்துகள் மனமயக்க பொருட்கள் சட்டம் 1985, வழக்கில் எதிரிகளான திருநெல்வேலி, சிந்துபூந்துறை, செல்வி அம்மன் கோவில், வடக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் விஜயன் (38), தூத்துக்குடி, நாலுமாவடி, மறவர் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் கந்தசாமி (30) ஆகியோர் சட்டவிரோதமான கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மானூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராமர் அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், விஜயன், கந்தசாமி ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை 27.08.2020 பாளை மத்திய சிறையில் சமர்பித்தார்.
தாழையூத்து காவல் நிலையம். இ.த.ச பிரிவு 147,148,341,294(b),307,302, வழக்குகளில் எதிரிகளான தாழையூத்து தாதனூத்து, தெற்கு தெருவைச் சேர்ந்த வேலு என்பவரின் மகன் விஜய்@சுடலைகண்ணு (23), அதே பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மகன் ரகுநாத்(30) ஆகியோர் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தாழையூத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.E.சாம்சன் அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், எதிரி விஜய்@சுடலைக்கண்ணு, ரகுநாத் ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை 27.08.2020 பாளை மத்திய சிறையில் சமர்பித்தார்.
திருநெல்வேலி அனைத்து மகளிர் ஊரக காவல் நிலையம் இ.த.ச.பிரிவு 448,376,506(ii) இ.த.ச @ 448,376,506(ii) இ.த.ச & 3(1)w(i) 3(2)(va)SC/ST (POA) Act வழக்கில் எதிரியான தாழையூத்து சுடலை கோவில் தெருவைச் சேர்ந்த பேச்சிமுத்துவின் மகன் சந்தனமாரிமுத்து (22) என்பவர் பாலியல் வன்புணர்ச்சி வழக்கு குற்றவாளி ஆவார். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் மேற்படி எதிரியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.அர்ச்சனா அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், எதிரி சந்தனமாரிமுத்து என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்பு காவல் உத்தரவு ஆணையை இன்று (27.08.2020) பாளை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி