திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் அருகே அமைந்துள்ள அமரநாதன் என்பவரது தோட்டத்தில் சின்னச்சாமி என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த 10.08.2020 இரவு 9 மணியளவில் இவரது தோட்டத்தில் சித்தரேவு கிராமத்தை சேர்ந்த 1.சிவராமன்(19), 2.வாஞ்சிநாதன்(20), 3.முத்தையா(60), 4.மார்க்கண்டன்(55), 5.பைரவன்(19), 6.லட்சுமணன்(21) ஆகியோர் கையில் டார்ச் லைட் உடன் சுற்றித்திருந்தவர்களை மேற்படி அமரநாதன் மற்றும் சின்னசாமி ஏன் இங்கு சுற்றுகிறார்கள் என கேட்டபோது ஈசல் மற்றும் பன்றிக்கு வெடி வைக்க வந்ததாக கூறினர். அப்போது அதிக சத்தத்துடன் வெடி வெடிக்கவே அங்கு சென்று பார்த்தபோது தான் வளர்த்து வந்த நாய் தலை சிதறி இறந்துவிட்டதாக மேற்படி அமரநாதன் செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் அவர்களிடம் புகார் கொடுத்தார். புகாரினை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட ஆய்வாளர் சம்பவத்தில் ஈடுபட்ட 6 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 12 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா