மதுரை : ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஷேர் ஆட்டோவில் பயணித்த போது ரூபாய் 82,500 பணத்தை தவற விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட ஒத்தக்கடை காவல் நிலைய ஆய்வாளர்திரு. ஆனந்த தாண்டவம், SI திரு. சிங், முதல் நிலை காவலர்கள் திரு. சிவகுமார் மற்றும் திரு. கார்த்திக், வினோபாவா ஆகியோர் CCTV மூலம் சம்பந்தப்பட்ட ஆட்டோவை கண்டறிந்து, ஓட்டுநர் காவல் நிலையம் வரவழைக்கப்பட்டு ரூபாய் 82,500 பணத்தை மீட்டுக் கொடுத்தனர்.
மேலும் ஆட்டோ டிரைவர் நேர்மையை பாராட்டி அவருக்கும் காவல்துறையினர் பரிசு வழங்கினர்.















