விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வீட்டை உடைத்து திருடிய குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின்படி விருதுநகர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.ராமகிருஷ்ணன் (பொறுப்பு) அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன் மற்றும் தலைமை காவலர் திரு. அழகுமுருகன்,முதல்நிலை காவலர்கள் திரு.பிரபு, திரு.சிவக்குமார்,திரு.பாண்டியராஜன்,திரு.முத்துஅய்யனார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நடத்திய விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது திருநெல்வேலியைச் சேர்ந்த அல்போன்ஸ் என்பதனை கண்டுபிடித்து,மேற்படி நபரை கைது செய்ததோடு,காணாமல்போன நகைகளை பறிமுதல் செய்தனர்.இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. பெருமாள் IPS அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.














