பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து சட்டவிரோதமாக மது குற்றத்தில் ஈடுபட்டு வந்த நபரான தேவராஜ் (53). த/பெ குமாரசாமி பெருமாள் கோவில் தெரு, கள்ளப்பட்டி கிராமம், வேப்பந்தட்டை வட்டம், பெரம்பலூர் மாவட்டம். என்பவரை ஈடுபட்ட நபரை ‘கள்ளச்சாராயக்காரர்’ (BOOT LEGGER ACT) தடுப்புச் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு, பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் திருமதி .க.கற்பகம் இ.ஆ.ப அவர்கள் (28.12.2023) -ம் தேதியான மேற்படி குற்றவாளியை ‘கள்ளச்சாராயக்காரர்’ தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.மேற்படி குற்றவாளியை கள்ளச்சாராயக்காரர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய சிறப்பாக பணிபுரிந்த அரும்பாவூர் காவல்நிலைய காவல்துறையினரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள் வெகுவாக பாராட்டினார்.