பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தபட்ட குற்றவாளியான சோலைமுத்து(46). த/பெ ராஜ், அய்யர்பாளையம், அ.மேட்டூர், பெரம்பலூர் மாவட்டம். என்பவர் நீதிமன்ற பிணையில் வெளிவந்து பின் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளி சோலைமுத்து மீது கடந்த 2022-ம் ஆண்டு பெரம்பலூர் நீதிமன்றத்தால் பிடி ஆணை(NBW) பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்து வந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.A.பழனிச்சாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி தனிப்படை அமைக்கப்பட்டு மேற்படி குற்றவாளியை தேடி வந்தனர். இதன்படி உதவி ஆய்வாளர் திரு.பாண்டியன் அவர்களின் தலைமையிலான குழுவினர் மேற்படி தலைமறைவாக இருந்த சோலைமுத்துவை கைது செய்து (11.12.2023) -ம் தேதி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்து நீதிமன்ற பிடிக்கட்டளையை நிறைவேற்றியுள்ளனர்.