திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊதியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முதலிபாளையம் பகுதியில் வசித்து வந்த செந்தில்குமார்42. என்பவர் 31.01.2022 ஆம் தேதி இரவு 08.45 மணியளவில் தனது மனைவி சங்கீதா 32. என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அங்கே சாலையோரமாக நின்றிருந்த மேற்கண்ட சங்கீதா என்பவரின் சகோதரர் தீபன் குமார் 30. இருசக்கர வாகனத்தை தள்ளிவிட்டு, தகாத வார்த்தைகளால் திட்டி, பலமான ஆயுதத்தால் செந்தில் குமாரை தாக்கியதாகவும் இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே செந்தில்குமார் இறந்ததாகவும்,
சங்கீதா 32. என்பவர் 31.01.2022 ஆம் தேதி இரவு 11.00 மணியளவில் ஊதியூர் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் ஊதியூர் காவல்நிலைய குற்ற எண்.17/2022 U/s. 341, 294(b), 302 IPC இன் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர். வழக்கின் விசாரணையில் கொலை செய்யப்பட்ட செந்தில்குமார் 42. என்பவரும், சங்கீதா 32. என்பவரும், 14 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், அப்போதிருந்து தீபன் குமாருக்கும் முன் விரோதம் மற்றும் நிலத் தகராறு ஆகியவை இருந்து தெரியவந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி தீபன் குமார் 30. என்பவரை ஊதியூர் காவல்துறையினர் 03.02.2022 ஆம் தேதி கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.