செங்கல்பட்டு : செங்கல்பட்டு வடக்கு மண்டல காவல்துறை தலைவர் டாக்டர் கண்ணன் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவுப்படி காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு பகலவன் ஐபிஎஸ் அவர்களின் மேற்பார்வையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சாய் பிரனீத் ஐபிஎஸ் அவர்களின் கண்காணிப்பில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில், செய்யூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர், மற்றும் ஐந்து காவலர்கள் கொண்டு செய்யூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓதியூர் கிராமத்தில் (11/6/2023) ஆம் தேதி காலை 10:45 மணி முதல் பகல் 1.00 மணி வரை ட்ரோன் உதவியுடன் மதுவிலக்கு வேட்டை நடைபெற்றது.
மேற்படி மதுவிலக்கு வேட்டையில் பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை, மேலும் இனிவரும் நாட்களிலும் இந்த தீவிரம் மதுவிலக்கு வேட்டை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் கள்ளச்சாராய நடமாட்டம் மற்றும் கள்ள சந்தையில் மது இருப்பது போன்ற தகவல்களை காவல் கண்காணிப்பாளரின் கட்டுப்பாட்டில் உள்ள 72001 02104 மற்றும் 90427 81756 ஆகிய பிரத்தியேக எண்ணிற்கு whatsapp மூலமாகவோ அல்லது குறுந்தகவல் மூலமாகவோ தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. தகவல் தருபவர்களின் விவரம் பாதுகாக்கப்படும் குற்றவாளிகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ராஜ் கமல்




















