அரியலூர் : அரியலூர் மாவட்டம் தாமரைக்குளம் அருகே கடந்த மாதம் பங்காளிகளுக்கு இடையேயான இட பிரச்சினையை சமாதானம் செய்ய முயன்ற உறவினர் மீது தாக்குதல் நடத்தி, கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில்
குற்றவாளியை நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைத்தனர்.
இந்த பதட்டமான சூழ்நிலையில் குற்றவாளி வெளியே இருந்தால் அவருக்கும் அவரது பங்காளி குடும்பத்தினருக்கும் இடையே சண்டை வர வாய்ப்பு இருப்பதாலும், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற காரணத்தினாலும் குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆய்வாளர் திரு. செந்தில் மாறன் அவர்கள், அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்(பொ) திரு. அப்துல் காபூர் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் மாவட்ட ஆட்சியர் திருமதி.D.இரத்னா இ.ஆ.ப. அவர்களுக்கு பரிந்துரை செய்தார்கள். பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள் குற்றவாளி வெங்கடேசனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்கள். இதனடிப்படையில் வெங்கடேசனை அரியலூர் மாவட்ட காவல்துறையினர் 04/09/2020 அன்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.