இராமநாதபுரம் : முதுகுளத்தூர் பகுதியைச் சார்ந்த நல்லேந்திரன் என்ற நபர் புது கார் வாங்கிய நிலையில் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதி அருகே தனது ஓட்டுநரிடம் காரை கொடுத்து வீட்டிற்கு கொண்டு போகும்படி கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வெகு நேரமாகியும் தனது வாகனம் வீட்டிற்கு செல்லாத நிலையில் மேலும் கார் ஓட்டுநர் போனை எடுத்துப் பேசாததாலும் காரை ஓட்டுநர் நந்தகுமார் கடத்திச்சென்றாரா? அல்லது வேறு யாரேனும் மர்ம நபர்கள் காரைக் கடத்திவிட்டனரா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நல்லேந்திரன் நரிக்குடி காவல்துறையினருக்கு செல்போன் மூலம் புகார் தெரிவித்துள்ளார்.
விரைந்து செயல்பட்ட போலீசார் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநரின் செல்போன் மூலம், அருப்புக்கோட்டை கல்லூரணி பகுதி அருகே இருப்பதை கண்டறிந்து சம்பந்தப்பட்ட அருப்புக்கோட்டை நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் . உடனடியாகத் துரிதமாகச் செயல்பட்ட நகர் காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்கள் அக்காரை கல்லூரணி அருகே சம்பந்தப்பட்ட வாகனம் வருவதைக் கண்டு தடுத்து நிறுத்தியுள்ளார்.
வாகன ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுவிட்ட நிலையில் தொடர்ந்து பின்தொடர்ந்த காவல் ஆய்வாளர் அவர்கள் காரை மடக்கி பிடித்தார்.
உடனே வானத்தில் இருந்த ஓட்டுநர் காரை நிறுத்திவிட்டு காட்டிற்குள் தப்பி ஓடிய நிலையில் ,
இதனிடையே காரால் மோதித் தன்னைக் கொல்ல வந்தபோதும், அசராமல் துரிதமாகச் செயல்பட்டு கடத்தப்பட்ட காரை ஒரு மணிநேரத்தில் மடக்கிப் பிடித்த அருப்புக்கோட்டை நகர் காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.