இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் வருண்குமார் அவர்கள் இன்று பணிக்கு வரும்போது ஈ.சி.ஆர் அருகே உணவின்றியும் கவனிப்பாரற்றும் சாலையில் கிடந்த ஒரு வட நாட்டு மனநலன் பாதிக்கப்பட்ட நபரை கண்டவுடன் உடனடியாக தனது தனிப்பிரிவு காவலர்களை அழைத்து அவருக்கு உதவி செய்யும்படி உத்தரவிட்டார்.
தனிப் பிரிவு எஸ்.ஐ திரு. உதயகுமார் மற்றும் தனிப்பிரிவு தலைமைக்காவலர் திரு சரவணன் , குமாரசாமி, எஸ்.ஐ. மாதவன் உள்ளிட்டோர் அடங்கிய குழு உடனடியாக களத்தில் இறங்கி சம்பந்தப்பட்ட மன நலம் பாதிக்கப்பட்ட நபரை முகவை தாய் பாசம் அறக்கட்டளை உதவியுடன் மீட்டனர். பின்னர் அவரை சுத்தப்படுத்தி குளிக்க வைத்து முடிவெட்டி ஆடைகள் அணிவித்து உணவு கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். தற்சமயம் அந்த வட நாட்டு நபரை மனநல காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இராமநாதபுரம் நகர் பகுதியிலும் புறநகர் பகுதியிலும் ஊரடங்கு காலத்தில் கவனிப்பாரற்று உணவின்றி சுற்றி திரியும் அனைவரையும் மீட்டு உரிய உதவிகள் செய்து மன நல காப்பகங்களிள் சேர்க்க தனது தனிப் பிரிவு காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் வருண்குமார் இவரின் இந்த பணி அனைவரையும் மணம் நெகிழ செய்வதாக உள்ளது. இதைக்கண்ட அனைத்து மக்களும் காவல் துறையினரையும் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் வருண்குமார் அவர்களையும் பாராட்டி வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்