நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக உள்ள பெண் காவலர் திரு. செல்வி கண்மணி (கா.எண்-249) என்பவர் பொது ஊரடங்கு காலத்தில் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு வாரம் பத்து முதியவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார் அந்த வகையில் இன்று நாகப்பட்டினம் நகர பேருந்து நிலையத்தில் உணவு இன்றி தவித்த முதியவர்களுக்கு உணவு வழங்கினர் அப்போது ஓர் மூதாட்டிக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கிய போது இவரின் இந்த மனிதநேயம் மிக்க செயலை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.