திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட யாதவர் தெருவை சேர்ந்த, சங்கரலிங்கம் என்பவரின் மகன் மாயாண்டி (38) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கொலை வழக்கில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி வழக்கின் குற்றவாளிகளான சீவலப்பேரியை சேர்ந்த மாசானமுத்து 19)வல்லநாட்டை சேர்ந்த தம்பான் (19) வசவப்பபுரத்தை சேர்ந்த மாயாண்டி என்ற மதன் (18), இசக்கிபாண்டி (19) மானூர் பல்லிக்கோட்டையை சேர்ந்த மாடசாமி (27), சுபாஷ் (24), மேலதாழையூத்தை சேர்ந்த வெயில்குமார் என்ற கொக்கிகுமார் (27) மற்றும் சீவலப்பேரியை சேர்ந்த முத்துமாரி என்ற குஜராத் (19) ஆகியோரை திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஆனந்தராஜ், அவர்கள் பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததன் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குற்றவாளிகள் 8 பேரையும் இன்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணை பிறப்பித்தார்.