திருச்சி : திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை போதை பொருட்களின் விற்பனையைத் தடுக்க சிறப்பு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் மாநகர் முழுவதும் 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன் 750 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தஞ்சாவூர் சாலையில் ஒரு தனியார் கட்டிடத்தில் 87 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை போதைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த சுப்ரமணியன், சந்திரசேகர் மற்றும் பயன்படுத்திய ஆட்டோ PIAGG10 Auto TN – 45- BD-1793 பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கணபதி நகர் அருகில் தனியார் குடோனில் இருந்து 656 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை போதைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த சிவா (எ) மோகன், மணிகண்டன் என்பவர்களை கைது செய்தும் வழக்கின் புகையிலை போதைப் பொருட்களை பறிமுதல் செய்து நால்வரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த குற்ற செயலை ரகசியமாக கண்டறிந்து குற்றவாளிகளை கைது செய்ய உதவிய தனிப்படை காவலர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.