குமரி: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.ஜெயராமசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் ஆற்றூர் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பொன்மனை சேர்ந்த வினோத் 23 என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வினோத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.