தஞ்சை: அனுமதியின்றி கடத்தி வரப்படும் வெளிமாவட்ட நெல்மணிகள் தஞ்சையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார் வந்ததையடுத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை எஸ்.பி. திரு.பாஸ்கரன் தலைமையில் கடந்த இரண்டு நாட்களாக மேற்கொண்ட வாகன சோதனையில்,திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், விருதுநகர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அனுமதியின்றி கடத்தி வரப்பட்ட 7 லாரிகளில் 120 டன் எடை கொண்ட 2,000 நெல்மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், தஞ்சை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல் ஆய்வாளர் அலுவலத்திற்க்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.