காஞ்சீ : காஞ்சீபுரம் அருகே குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் ரகசிய தகவலின் அடிப்படையில், குடிமைப்பொருள் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் திரு.ஆபாஷ்குமார் கண்காணிப்பாளர் திருமதி.கீதா துணை கண்காணிப்பாளர் நாகராஜன், ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தலை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் திரு.முகேஷ்ராவ், தலைமையில் ஓரிக்கை, திருவேங்கையப்பன் நகரில் உள்ள ஒரு குடோனை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அங்கு சுமார் 7 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். ஓரிக்கையை சேர்ந்த மாலிக் பாஷா (36), கிஷோர் (38) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து காஞ்சீபுரம் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்