நீலகிரி : நீலகிரி மாவட்டம், கூடலூர் உட்கோட்டம், கூடலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொரப்பள்ளி சோதனை சாவடியில் ஈச்சர் லாரியில் பிஸ்கட் உடன் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வருவதாக தகவல் கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் சோதனையிட்டதில் சுமார் 40 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளியை கைது செய்தனர்.