திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் திரு.பாஸ்டின் தினகரன், சார்பு ஆய்வாளர் திரு.மாரிமுத்து அவர்களின் தலைமையில், தலைமை காவலர்கள் திரு.சந்தியாகு, திரு.செந்தில்குமார், திரு.சங்கரநாராயணன், திரு.பிரபாகரன் ஆகியோர்கள் கொண்ட தனிப்படை போலீசார் ஒட்டன்சத்திரம் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது K.அத்திக்கோம்பை அருகே அமுதா(44) என்பவரது வீட்டில் குடியிருக்கும், வேடசந்தூர் பாடியூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் குமார், பிரியதர்ஷினி மற்றும் கன்னிவாடி பகுதியைச் சேர்ந்த தனபாண்டி ஆகியோர்கள் சட்டவிரோதமாக வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 03 நபர்களையும், அதற்கு உடந்தையாக இருந்த வீட்டின் உரிமையாளர் அமுதா(44) என்பவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 84 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மூன்று நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர் திரு.அழகுராஜா
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர் திரு.அழகுராஜா