திருச்சி: திருச்சி மாநகர காவல் துறையின் கட்டுப்பாட்டில் 14 சட்டம் ஒழுங்கு, 6 குற்றப்பிரிவு, 6 மகளிர் காவல் நிலையங்கள், மாநகர குற்றப்பிரிவு, சைபர் கிரைம் உள்ளிட்ட 34 காவல் நிலையங்களில் உள்ளது. இதில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 16 ஆய்வாளர்கள் புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் நான்கு புதிய காவல் ஆய்வாளர்கள் தற்போது பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர். அதில் திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் திரு.முருகவேல் கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கும், கன்டோன்மென்ட் ஆய்வாளர் மாநகர குற்றப்பிரிவு இருக்கும் மாற்றப்பட்டுள்ளார்.
அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஆய்வாளர் திரு.வேல்முருகன் கண்டோன்மென்ட் குற்றப்பிரிவுக்கும், அரியலூர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளர் திரு.சிந்துநதி மாநகர சைபர் கிரைம் பெரம்பலூர் மாவட்டத்தில் பணியிலிருந்த ஆய்வாளர் திரு.பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றுக்கொண்டுள்ளனர்.
புதிதாக பொறுப்பேற்ற அனைவரும் மாநகர காவல்துறை ஆணையரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.