குமரி: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் போலீஸ் தலைமை காவலர்கள் திரு.சாம்சன், திரு.ஸ்ரீகுமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் 30 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பெரியவிளையை சேர்ந்த சுதீஷ் 27. என்பவரை கைது செய்து புகையிலை பொருட்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.