மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 28 கிலோ கஞ்சா கடத்திய கல்லூரி விரிவுரையாளர் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்து அவர்கள் சென்ற கார் மற்றும் 2 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருமங்கலம் அருகே உள்ள தும்மக்குண்டு பகுதி காளப்பன்பட்டி பிரிவில் திருமங்கலம் தாலுகா ஆய்வாளர் ராதா மகேஷ், எஸ்.ஐ குபேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதிகள் சாக்கு மூட்டையை உடன் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த தியாகு என்பவரை விசாரித்தபோது சாக்குமூட்டையில் 21 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
மேலும் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தார் காரை போலீசார் சோதனையிட்டுள்ளனர். சோதனையில் காரில் இருந்த 4 கிலோ கஞ்சா பிடிபட்டது.
அவர்கள் யார் என்று விசாரித்ததில் மணிமாறன் என்பவர் உசிலம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருவது தெரியவந்தது.
மேலும் அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு மோட்டார் பைக்கில் வந்த 3 வாலிபர்களை போலீசார் சோதனை செய்து அவர்களிடம் இருந்தும் கஞ்சாவை கைப்பற்றினர்.
மேலும் கல்லூரி விரிவுரையாளர் உள்ளிட்ட எட்டு பேரையும் கைது செய்து அவர்கள் சென்ற கார் மற்றும் 2 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.