தேனி: கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தேனி மாவட்டத்தில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள்
உத்தரவின்பேரில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், கிராம விழிப்புணர்வு காவலர்கள்(VVPO), இருசக்கர ரோந்து காவலர்கள்(Bike Patrol) தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று
கிராம முக்கிய தலைவர்களை சந்தித்து தங்கள் பகுதிகளில் நோய்த்தொற்று பரவல் மேலும் பரவாமல் கட்டுப்படுத்தும் விதம் குறித்தும்,
நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்த (24*7) மணி நேரமும் உதவிக்கு காவல்துறையை தொடர்பு கொள்ளலாம் என்று தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை வழங்கியும்,
நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசின் முழு ஊரடங்கு உத்தரவுகளை பின்பற்றி காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டனர்.