திருநெல்வேலி : பாளையங்கோட்டை, சாந்தி நகர், குறுக்கு தெருவை சேர்ந்த ரத்தினகுமார் (66), பொற்செல்வி (58), ஆகிய தம்பதியருக்கு சொந்தமான 12 செண்ட் இடம் முன்னீர்பள்ளம் பகுதியில் உள்ளது. இவ்விடத்தை போலி ஆவணம் மூலம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் அதேபோல் பாளையங்கோட்டை, அருணகிரிநாதர் தெருவை சேர்ந்த மாணிக்கம் (71), என்பவருக்கு சொந்தமான 3 செண்ட் இடம் முன்னீர்பள்ளம் பகுதியில் உள்ளது. இவ்விடத்தை போலி ஆவணம் மூலம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் அதேபோல் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், மணக்கரை பகுதியைச் சேர்ந்த ராஜம்மாள் (65), என்பவருக்கு சொந்தமான 4½ செண்ட் இடம் கீழநத்தம் பகுதியில் உள்ளது. இவ்விடத்தை போலி ஆவணம் மூலம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. மேற்கண்ட நபர்கள் நிலத்தினை மீட்டுத்தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்களிடம் மனு அளித்தனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆகியோரின் உத்தரவின் பேரில் நடைபெற்ற முகாம் மூலமாக மேலசெவல், சொக்கலிங்கபுரம், பாரதிதெருவை சேர்ந்த வேலம்மாள் (56), என்பவருக்கு சொந்தமான 11 செண்ட் இடம் சொக்கலிங்கபுரம் பகுதியில் உள்ளது. இடத்தை போலி ஆவணம் தயார் செய்து விற்பனை செய்தது தெரியவந்தது. மேற்படி நிலத்தினை மீட்டு தருமாறு மனு அளிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு சேரன்மகாதேவி மாவட்ட பதிவாளர் மூலமாக தீர்வு காணப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயபால் பர்னபாஸ், அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி. மீராள், பானு அவர்கள், உதவி ஆய்வாளர்கள் திருமதி. சோபியா, மற்றும் திரு. முருகன், தலைமை காவலர் திரு. நாகராஜன், மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு நிலங்களை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் நில உரிமையாளர்களிடம் 13.10.2022 இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். மேற்படி மனுக்களை திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூபாய் 21 ½ லட்சம் மதிப்புள்ள நிலத்தினை மீட்டு நிலங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்த திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.