இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப் பொருட்களுக்கு எதிராக காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர சோதனை நடவடிக்கையின் போது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த (01.02.2026) அன்று, திருப்புல்லாணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் துறையினர் நடத்திய வாகன சோதனையில், சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த போது, அந்த இரு நபர்களிடமிருந்து மொத்தம் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், இதுபோன்ற சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
















