திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் அடிதடி, கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்கில் குற்றவாளியான சேரன்மகாதேவி வட்டம், சேரன்மகாதேவி, மேல 4வது தெருவைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் மாயாண்டி என்ற கட்டமாயாண்டி 25. என்பவர் அடிதடி,கொள்ளை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் கவனத்திற்கு வந்ததால் குற்றவாளியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சுத்தமல்லி காவல் ஆய்வாளர் திரு. ஜீன்குமார் அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், 30.11.2021 இன்று குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.