.
திருச்சி: திருச்சி மாநகரத்தில் 10.10.22-ந் தேதி கண்டோன்மெண்ட், ஜயப்பன்கோவில் அருகில், திருமதி.உமாசங்கரி தனிப்படை ஆளிநர்களுடன் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது, சந்தேகத்தின்பேரில் புத்தூர், VNP தெருவை சேர்ந்த ஜெயராமன் என்பவரை பிடித்து விசாரணை செய்தபோது,
அவரிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய இருசக்கர வாகனத்தில் மூட்டைகளில் கடத்தி வந்தவரை பிடித்து, சுமார் ரூ.2,00,000/- இலட்சம் மதிப்புள்ள, ஹான்ஸ் – 6 மூட்டைகள், விமல்பாக்கு – 12 மூட்டைகள், கூல்லிப் – 2 மூட்டைகள் மற்றும் RMD பான்பராக் – 20 பாக்ஸ் ஆகிய குட்கா பொருள்களை பறிமுதல் செய்தும், குட்கா பொருள்களை கடத்த பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தும்,
மேற்படி நபரை கைது செய்தும், வழக்குப்பதிவு செய்தும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை வாகன தணிக்கையின்போது பிடித்த தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.