விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், பந்தல்குடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய மல்லையா என்ற மல்லிசாமி பணிக்காலத்தில் இறந்த நிலையில் அவரது குடும்பத்தாரருக்கு அவருடன் கடந்த 2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்த போலீசார் ரூ.14 லட்சத்து 63 ஆயிரத்து 250 நிதி திரட்டி அவரது குடும்பத்தாரிடம் வழங்கினர். இந்த நிதியினை விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு மனோகர், மல்லையாவின் குடும்பத்தாரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் 2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்த போலீசார் கலந்து கொண்டனர்.