திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலை சேர்ந்த இராமசாமி என்பவருக்கு சொந்தமான 73 செண்ட் இடம் முக்கூடல் பகுதியில் உள்ளது. இவ்விடத்தை போலி ஆவணம் மூலம் வேறு ஒருவருக்கு திருநெல்வேலிவிற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் அதேபோல் மானூர்,வடக்கு தெருவை சேர்ந்த அன்னராஜ் என்பவருக்கு சொந்தமான 25 செண்ட் இடம் நாஞ்சான் குளம் பகுதியில் உள்ளது. இவ்விடத்தை போலி ஆவணம் மூலம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. மேற்கண்ட நபர்கள் நிலத்தினை மீட்டுத்தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்களிடம் மனு அளித்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயபால் பர்னபாஸ் அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி. மீராள் பானு அவர்கள், உதவி ஆய்வாளர்கள் திருமதி. சோபியா மற்றும் திரு. முருகன், தலைமை காவலர் திரு. நாகராஜன் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு நிலங்களை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் நில உரிமையாளர்களிடம் (08.11.2022), மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.