தி|ருநெல்வேலி: திருநெல்வேலி வி.கே.புரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் 100 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக மினி லாரியில் மறைத்து வைத்து கொண்டுவந்த வழக்கில் இராமானுஜம்புதூர், இந்திராநகரை சேர்ந்த வானுமாமலை என்பவரின் மகன் தளவாய்மாடன் 24, என்பவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேற்படி நபர் மீது வி.கே.புரம் காவல் ஆய்வாளர் திரு. பெருமாள் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் 12.01.2023 இன்று அடைக்கப்பட்டார்.