திருநெல்வேலி : தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன்(46), என்பவர், கடந்த 2010-ல் கிருஷ்ணாபுரம் பகுதியில் 6 செண்ட் நிலத்தை வாங்கியுள்ளார். மேற்படி நபர் தொடர்ந்து அவரது நிலத்தை பார்வையிட்டு வருவது உண்டு. அப்போது 2022-ஆண்டு ஜீலை மாதம் அவர் நிலத்தை பார்வையிட சென்ற போது அங்கு மண்,கற்கள் நிரப்பி வைத்திருந்தார்கள். மேற்படி நபர் நிலத்தை வில்லங்க சான்றிதழ் போட்டு பார்த்ததில் நிலம் 2011-ஆண்டு மற்றும் 2018-ம் ஆண்டு போலி ஆவணம் மூலம் வேறோருவருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. பின் ராஜேந்திரன் மேற்படி நிலத்தினை மீட்டுத்தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்களிடம் மனு அளித்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயபால் பர்னபாஸ், அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி. மீராள் பானு அவர்கள், உதவி ஆய்வாளர்கள் திருமதி. சோபியா, மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு நிலத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் நில உரிமையாளரிடம் (14.11.2022) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், நிலத்தை வாங்கும் நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தை தொடர்ந்து நேரில் சென்று பார்வையிடுவதுமட்டுமல்லாமல் நிலத்தை அவ்வப்போது வில்லங்க சான்றிதழ் போட்டு பார்த்து கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.