இராமநாதபுரம்: சாயல்குடி பஜாரில் ஜமாலியா ஹோட்டல் உரிமையாளரை (21.01.2024) அன்று இரவு அவரது ஹோட்டலுக்கு வந்த 1) தமிழரசன், த/பெ.ஆறுமுகம் மாதவன் நகர், சாயல்குடி 2) வெட்டுப்புலி என்ற சக்திவேல், த/பெ. மாரிமுத்து, கூராங்கோட்டை 3) மணிகண்டன், த/பெ. கோவிந்தன் ஜெகதாபட்டினம் 4) ராஜீவ்காந்தி, த/பெ. பசும்பொன்லிங்கம் எம்.கரிசல்குளம் ஆகியோர் ஹோட்டல் உரிமையாளருடன் தகராறு செய்து தாக்குதல் நடத்தியது சம்பந்தமாக சாயல்குடி காவல் நிலையத்தில் மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து மேற்படி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்திருந்த நிலையில், மேற்படி குற்றவாளிகளில் தமிழரசன் என்பவர் (17.02.24) அன்றும் சக்திவேல் என்பவர் (22.02.24) இன்றும் குண்டர் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி