இராமநாதபுரம்: சாயல்குடி பஜாரில் ஜமாலியா ஹோட்டல் உரிமையாளரை (21.01.2024) அன்று இரவு 10:45 மணிக்கு அவரது ஹோட்டலுக்கு வந்த தமிழரசன், த/பெ.ஆறுமுகம் மாதவன் நகர், சாயல்குடி வெட்டுப்புலி என்ற சக்திவேல், த/பெ. மாரிமுத்து, கூராங்கோட்டை மணிகண்டன், த/பெ. கோவிந்தன் ஜெகதாபட்டினம் ராஜீவ்காந்தி, த/பெ. பசும்பொன்லிங்கம் எம்.கரிசல்குளம் ஆகியோர் சிக்கன் ரைஸ் கேட்டதற்கு, ஹோட்டல் உரிமையாளர் சிக்கன் ரைஸ் இல்லை எக் ரைஸ் தான் இருக்கு என்று சொன்னபோது மேற்படி நபர்கள் ஹோட்டல் உரிமையாளருடன் தகராறு செய்து கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இது சம்பந்தமாக சாயல்குடி காவல் நிலையத்தில் மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து மேற்படி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்திருந்த நிலையில், மேற்படி குற்றவாளிகளில் தமிழரசன் என்பவர், (17.02.24) தேதி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி