தூத்துக்குடி: மாசார்பட்டி காவல்நிலைய பகுதியில்எஸ்.ஐ.விநாயகம் தலைமையிலான
போலீசார் நேற்று ரோந்து சென்ற போது வெம்பூர் சமுதாயக்கூடம் அருகே வெம்பூரைச் சேர்ந்த கந்தன் மகன் ராஜ் (32),
அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் தங்கமாரியப்பன் (36), தங்கவேல் மகன் தயாளன் (42), சின்னகுருசாமி மகன் கணேசன் (46) மற்றும பெருமாள் மகன் பொன் பெருமாள் (31) ஆகிய 5 பேரும் பணத்திற்காக சட்டவிரோதமாக
சீட்டுக் கட்டுகளை வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. ஆகவே போலீசார் மேற்படி 5 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூபாய். 110/- மற்றும் சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.