தேனி: தேனி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் சமூக இடைவெளியை பின்பற்றி வாகன தணிக்கையில் ஈடுபட்டு அத்தியாவசிய தேவைகளை தவிர தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்தும் அதிகமான அளவில் ஆட்டோக்கள், டூவீலர்கள், சரக்கு வாகனங்கள் அதிகளவில் வருகின்றன. இதில் உடனடியாக கொரானா தொற்றை குறைத்திடும் வகையிலும்,வாகனங்கள் செல்வதை தடுத்திடும் வகையிலும், தேனி எஸ்.பி.சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் அடிப்படையில், வைகைசாலை பிரிவில் போலீஸார், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் இதில் இ- பதிவு இல்லாத இரண்டு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது