திருநெல்வேலி : திருநெல்வேலி வீரவநல்லூரை சேர்ந்த கொம்பன் (36), முப்புடாதி என்ற கோபி (23), புதுக்குடியை சேர்ந்தவர் மாரியப்பன் (25). இவர்கள் வீரவநல்லூர் போலீஸ் நிலைய பகுதியில் நடந்த அடிதடி வழக்கில் ஈடுபட்டாதாக கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.சரவணன், வீரவநல்லூர் முருகன் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று கொம்பன், முப்புடாதி என்ற கோபி, மாரியப்பன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் குண்டர்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் இன்ஸ்பெக்டர் திரு.முருகன், நேற்று வழங்கினார்.