விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் கண்ணன் 43. கேரளாவுக்கு சென்று பின்னர் இரவு வீடு திரும்பிய போது
வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்ற போது அங்கு பீரோவின் கதவு உடைக்கப்பட்டு அதில் இருந்த பீரோவில் இருந்த பணம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மற்றும் 1 பவுன் கம்மல் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. கண்ணன் திருத் தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.