குமரி: கன்னியாகுமரி மாவட்டம் மகாராஜபுரம் கீழ ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராதா. இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். நேற்று வீட்டுக்கு வந்த போது பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்து ரூ.10 ஆயிரம் மற்றும் பாத்திரம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.