தேனி: தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணனுண்ணி, உத்தரவின் அடிப்படையில், காய்ச்சல் கண்டறியும் பணிகள் நடக்கிறது. இந்த பணிகளை துரிதமாக செய்யவும், கொரானா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையை மிகவும் தீவிரமாக
மேற்கொள்ள வேண்டும் என்றும உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல் தலைமையில் கோம்பை பேரூராட்சி செயல் அலுவலர் பஷீர் அகமது, ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்
. இதில் நடைபெற்று வரும் காய்ச்சல் சோதனை பணி குறித்தும், வீடு, வீடாக திரட்டப்படும் தகவல் குறித்தும் அறிவுரைகளை பேரூராட்சி மஸ்தூர்களுக்கு வழங்கினர்.