திருநெல்வேலி: திருநெல்வேலி பழையபேட்டை காந்திநகரில் உள்ள ஐஓபி காலனியை சேர்ந்தவர், அந்தோணி தங்கராஜ் (47). இவர், பழைய பேட்டை கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செங்கோல் மேரி. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக உள்ளார். இருவரும் புதன்கிழமை பணிகளுக்கு சென்று விட்டு வந்த பொழுது வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தாம். இது குறித்து அவா்கள் அளித்த தகவலின் பேரில், பேட்டை போலீசார் அங்கு வந்து பார்த்தபொழுது
வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த சுமார் 51 பவுன் தங்க நகைகளை மா்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையறிந்த மாநகர காவல் துணை ஆணையர், (மேற்கு) கீதா நேரில் வந்து விசாரணை நடத்தினார். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளின் மூலம் போலீசார் தொடா்ந்து விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்