திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., உத்தரவின் படி காவல் துணை ஆணையர்கள் V.கீதா, (மேற்கு), G.S.அனிதா, (தலைமையிடம்) S.விஜயகுமார் (கிழக்கு) ஆகியோரின் மேற்பார்வையில், மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் (21.11.2024) அன்று சந்திப்பு காவல் ஆய்வாளர், பொன்ராஜ் ம.தி.தா இந்து கல்லூரி பள்ளியில், தச்சநல்லூர் காவல் ஆய்வாளர், முத்துகணேஷ் வேதிக் வித்யாஷ்ரம் பள்ளியில், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன் , ஸ்ரீ சாய் சத்யா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர், இந்திரா சிருங்கேரி சாரதா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியிலும் மாணவ, மாணவியர்களிடம் போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்க செய்தார்கள். உடன் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்