இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் அருகே வாகன சோதனையின் போது கஞ்சாவை மறைத்து எடுத்து வந்த இரு நபர்களை கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.தினேஷ் அவர்கள் கைது செய்து U/s : 8(c)r/w 20(b)(ii) (B) NDPS Act – ன் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
மேலும், அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட சார்பு ஆய்வாளர் திரு.தினேஷ்பாபு மற்றும் தலைமை காவலர் திரு.சந்திரசேகர், முதல்நிலைக் காவலர் திரு.மதன்ராஜ் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் வெகுமதி அளித்து பாராட்டினார்கள்.